- Home
- News
- About Dindigul
- Education
- Jobs
- Entertainments
- Mobile Downloads
- Healthcare
- Classfieds
- Contact Us
Tamil News
தற்போதைய செய்திகள்
- 2ஜி முறைகேட்டில் சிதம்பரத்தின் பங்கு : சுப்ரீம் கோர்ட்டில் சுவாமி முறையீடு
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு உள்ள பங்கு குறித்த வழக்கை விசாரணை கோர்ட்டே மேற்கொள்ளும் என்ற கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். - ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது : உள்துறை அமைச்சகம்
புதுடில்லி : ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. ஓரினச்சேர்க்கையின் மூலம் <உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் அதிகளவில் பரவுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாது, டில்லி ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்துள்ளது. ஓரினச்சேர்க்கை, இந்திய கலாச்சாரம் , பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் தற்போதும் பாரம்பரியத்தில் மேலோங்கியே உள்ளது. எனவே, ஓரினச்சேர்க்கையை இங்கு அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக சுகாதாரத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. - சரணடையும் நக்சலைட்டுகளுக்கு பரிசு : மத்திய அரசு
புதுடில்லி : சரணடையும் நக்சலைட்டுகளுக்கு பரிசுத்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில், நக்சல் பாதிப்பு உள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் உயர் அதிகாரக் கூட்டம் தலைநகர் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமையுரையாற்றிய சிதம்பரம் கூறியதாவது, சரணடையும் நக்சலைட்டுகளுக்கு ரூ. 5 லட்சம் வரை பரிசுத்தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, நக்சலைட்டுகள் தங்களிடமுள்ள இலகுரக மெஷின் கன்களை ஒப்படைத்து சரணடையும் நக்சலைட்டுகளுக்கு ரூ. 5 லட்சமும், ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை ஒப்படைத்து சரவடைபவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை மத்திய அரசு வழங்க தயாராக உள்ளதாக அவர் கூறினார். நக்சல்களுக்கு எதிரான போரில், கிட்டத்தட்ட 71 ஆயிரம் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். - காயமடைந்த போலீசாரிடம் நீதிபதி விசாரணை
சென்னை : சென்னை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், பெருங்குடி பரோடா வங்கி மற்றும் கீழகட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில், துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலிக்கு கை பகுதியிலும், தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குஇடுப்பு பகுதியிலும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து, நீதிபதி இவர்களிடம் விசாரணை நடத்த <உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - திருப்பூரில் வீடு வீடாக போலீசார் சோதனை
திருப்பூர் : திருப்பூரில் தனியார் நகைக்கடை ஒன்றில் ரூ. 10 கோடி அளவிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து விசாரணையை துவக்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும், போலீசார் குழுவிற்கு 4 போலீசார் வீதம் 100 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாக சோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் வசித்து வரும் வடமாநிலத்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, வடமாநிலத்தவர்களிடம் தொடர்விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். - செஞ்சி அருகே கையால் குத்து விட்டதில் பெண் கொலை
செஞ்சி அருகே இடத்தகராறில் பெண்ணை அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மொடையூர் மதுரா திருத்தவெளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். 60. இவருக்கும் இவரது எதிர் வீட்டில் வசித்து வரும் உறவினர் அப்பாவு என்பவருக்கும் மாடு கட்டும் இடம் சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இதே ஊரை சேர்ந்த சின்னராசு என்பவர் இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்னை வண்ணாரப்பேட்டையில் லேத் பட்டரை நடத்தும் அப்பாவுவின் மகன் கிருஷ்ணமூர்த்தி, 41 வந்திருந்தார். இவர் இரவு 8.30 மணிக்கு மாடு கட்டும் இடம் சம்மந்தமாக கிருஷ்ணனிடம் தகராறு செய்து அடித்தார். இதை பார்த்த கிருஷ்ணனின் மனைவி அலமேலு குறுக்கே புகுந்து தடுத்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி அலமேலுவின் நெஞ்சில் கையால் பலமாக குத்தினார். இதில் சுருண்டு விழுந்த அலமேலு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அலமேலுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். - போலீஸ் ஸ்டேசன் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்
லேட்ஹர் : ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசன் மீது மாவோயிஸ்ட்டுகள் அதிரடி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 01.30 மணியளவில் லேட்ஹர் பகுதிக்கு வந்த மாவோயிஸ்டுகள், பாலுமத் போலீஸ் ஸ்டேசன் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போலீஸ் ஸ்டேசன் அருகே தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீஸ் ஸ்டேசன் மீது தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேந்திர சாஹூவின் வீட்டையும் மாவோயிஸ்டுகள் தரைமட்டமாக்கினர். அதிர்ஷ்டவசமாக, தாக்குதல் நடந்தபோது அவ்வீட்டில் யாரும் இல்லை. அப்பகுதி மக்கள், இதனை கண்டித்து தேசிய நெடுஞ்சாலை 99ல் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. - சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை : சசி - இளவரசி ஆஜர்
பெங்களூரூ: சொத்து குவிப்பு வழக்கில் சாட்சியத்தை பதிவு செய்ய இன்று 2 வது நாள் விசாரணைக்கு பெங்களூரூ கோர்ட்டில் சசிகலா மற்றும் இளவரசி ஆஜராயினர். கடந்த வாரம் சுமார் 40 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணையின்போது சொத்து குவித்ததில் ஜெ.,வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறியிருந்தார் . - கோல்கட்டாவில் சடலங்களுடன் இடதுசாரிகள் இன்று பேரணி
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. ஆனால், இதனை மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறந்த கட்சி தலைவர்களின் உடலுடன் கோல்கட்டாவில் பேரணி நடத்துகிறது. சடலங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் பேரணி, மாநிலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் செய்திகள்
- பா.ஜ., தான் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துகிறது: திக்விஜய் சிங்

உத்தர பிரதேச தேர்தலில், காங்கிரசை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார், அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங். மத்திய பிரதேச முன்னாள் முதல்வராக இருந்த இவர், நம்மூர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாதிரி, அதிரடியாக கருத்து தெரிவிப்பதில் வல்லவர். தேர்தலை ...
- பட்ஜெட்: காங்., தலைவர்களுடன் பிரணாப் இன்று ஆலோசனை

புதுடில்லி: மத்திய பட்ஜெட் குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் , மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று ஆலோசனை நடத்துகிறார். இவ்வாண்டுக்கான, மத்திய பட்ஜெட், அடுத்த மாதம் 16ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், தொழிலதிபர்கள், தொழில் வர்த்தக சபையினர், பொருளாதார ...
- நிதின் கட்காரி இன்று பெங்களூரு வருகை: நெருக்கடி கொடுக்க எடியூரப்பா கோஷ்டி தயார்
பெங்களூரு: நாளை பெங்களூரு வரும் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரியை, எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ., க்கள் சந்தித்து, நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடாவை கீழே இறக்க, அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருடன், எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக முதல்வர் ...
- பொது கொள்முதல் மசோதாவுக்கு ஒப்புதல்
புதுடில்லி: பொது கொள்முதல் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொள்முதல் செய்வதில் ஒளிவு மறைவின்மையை கொண்டு வரும் வகையில், பொது கொள்முதல் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்கும் அதிகாரம் பெற்ற மத்திய அமைச்சரவை குழு, இந்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் ...
- தேர்தல் கமிஷனின் அதிகாரம் பறிப்பா? விவாதிப்பதை தவிர்த்தது அமைச்சர்கள் குழு

புதுடில்லி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை தேர்தல் கமிஷனிடம் இருந்து பறிக்க வகை செய்யும் திட்டம் குறித்து, நேற்றைய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இவ்விவகாரத்தைப் பற்றி எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் ...
- பிரதமருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

புதுடில்லி: "தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மாநில அரசுகளோடு பேச்சுவார்த்தை நடத்துவார்' என, பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் உறுதியளித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், கடந்த 7ம் தேதி, அரசாணை ஒன்று ...
- உ.பி.: 5ம் கட்ட தேர்தல் துவங்கியது
லக்னோ: உ.பி. மாநிலத்திற்கு இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடந்து வரும் இந்த வாக்குப்பதிவில் ஏற்கனவே 4 கட்டவாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் இன்று 5ம் கட்ட தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது 13 மாவட்டங்களை உள்ளடக்கிய 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் பா.ஜ.வின் ...
- ராகுல் பிரசாரம் பலன் தராது : அகிலேஷ் யாதவ்
லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில், ராகுல் மேற்கொண்ட பிரசாரத்தின் மூலம் அக்கட்சிக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை என்று உ.பி. மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ்வின் மகனும், தற்போதைய சமாஜ்வாடி கட்சி வேட்பாளருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ...
- கோல்கட்டாவில் சடலங்களுடன் இடதுசாரிகள் இன்று பேரணி
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. ஆனால், இதனை மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ...
உலக செய்தி
- ஒசாமாவை காட்டிக் கொடுத்த டாக்டருக்கு தங்க பதக்கம்?

நியூயார்க்: பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா பின் லாடன் ஒளிந்திருந்ததைக் காட்டிக் கொடுத்த டாக்டர் ஷகீல் அப்ரிடிக்கு, அமெரிக்க காங்கிரசின் தங்கபதக்கம் அளித்து கவுரவிக்க வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் டனா ரோரபேச்சர், சமீபத்தில் பலுசிஸ்தானுக்கு சுயாட்சி உரிமை கோரி காங்கிரசில் மசோதா தாக்கல் செய்து பரபரப்பைக் கிளப்பியவர். அதோடு, அமெரிக்காவின் எதிரியான பாகிஸ்தானுக்கு இரு முகங்கள் உண்டு என, கடும் விமர்சனம் செய்து பாகிஸ்தானின் எரிச்சலை வாங்கிக் கட்டிக் ...
- முல்லா ஒமர் எங்கே இருக்கிறார் எனத் தெரியாது: பாக்., பல்லவி

லண்டன்: தலிபான் தலைவர் முல்லா ஒமர் எங்கிருக்கிறார் என்பது தெரியாது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அரசியல் முன்னேற்றம் குறித்து, சமீபத்தில் பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஆப்கன், பாக்., ஈரான் ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு நடந்தது. அதில் பங்கேற்ற ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், ஆப்கன், தலிபான் பேச்சுவார்த்தையில் முக்கிய தலிபான் தலைவர்களை பங்கேற்க வைக்க பாக்., முயல வேண்டும் என காட்டமாகத் தெரிவித்தார். ஏற்கனவே, தலிபான் தலைவர் முல்லா ஒமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாகிஸ்தானின் தெற்கு ...
- ஆஸி., வெளியுறவு அமைச்சர் கெவின் ரூத் ராஜினாமா

வாஷிங்டன்: ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூத் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவருக்கும் ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கும் இடையில் ஏற்பட்ட பதவி மோதலில் இந்த முடிவை ரூத் எடுத்து உள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சித் தலைவராக 2006ல் பொறுப்பேற்ற கெவின் ரூத், 2007 முதல் 2010 வரையில் பிரதமராக இருந்தார். இடையில் கட்சிக்குள் ஏற்பட்ட மோதலில், அதிக வாக்குகளைப் பெற்று கில்லார்டு பிரதமர் ஆனார். அதே ஆண்டு செப்டம்பரில், ரூத் வெளியுறவு அமைச்சராக்கப்பட்டார். இந்நிலையில் சமீப காலமாக கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் ...
- அமெரிக்கா செல்லும் புற்றுநோய் மருந்து
வாஷிங்டன்: அமெரிக்காவில், கருப்பை புற்றுநோய், "எய்ட்ஸ்' நோயோடு தொடர்புடைய தோல் புற்றுநோய்க்கும் "டாக்சில்' என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. தற்சமயம் அந்த மருந்துக்கு அமெரிக்காவில் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அம்மருந்துக்கு மாற்றாக, "லிபோடாக்ஸ்' என்ற மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. அதன்படி, குஜராத் மாநிலம் ஹலோல் என்ற இடத்தில் இயங்கி வரும் "சன் பார்மா க்ளோபல்' என்ற நிறுவனத்திடமிருந்து, அமெரிக்க மத்திய மருந்து பொருள் நிர்வாகம் "லிபோடாக்ஸ்' மருந்தை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக எப்.டி.ஏ., கமிஷனர் ...
- செக்ஸ் குற்ற கைதிகளுக்கு காயடிப்பு: உடனடியாக நிறுத்தும்படி கோரிக்கை
பெர்லின்: ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு நடத்தப்படும் காயடித்தல் அறுவை சிகிச்சையை, உடனடியாக நிறுத்தும்படி ஐரோப்பிய கவுன்சில் வலியுறுத்தி யுள்ளது. ஜெர்மனியில், பாலியல் குற்றவாளிகளுக்கு காயடித்தல் அறுவை சிகிச்சை பல்வேறு கடுமையான விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது இந்த சிகிச்சை நடத்தப்பட்டு விடும். மருத்துவ ரீதியாக இவர்கள் முடக்கப்படுவர். இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சிலின், சித்திரவதைக்கு எதிரான கமிட்டி நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,"ஜெர்மனியில் ...
- இந்திய கால் சென்டர்கள் மூலம் நிதி மோசடி: அமெரிக்க தனியார் நிறுவன உரிமையாளர் மீது வழக்கு
நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த சில தனியார் நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள "கால் சென்டர்கள்' மூலம், ஐந்து மில்லியன் டாலர் அளவிற்கு வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில், குறைந்த வட்டிக்கு ஆசைப்பட்டு குறுகிய காலக் கடன் வாங்குபவர்கள் அதிகம். இவர்களுக்காக பல்வேறு சிறு, குறு நிதி நிறுவனங்கள், ஆன்-லைனில் இந்த சேவையை வழங்குகின்றன. இந்தக் கடனுக்கு, வாடிக்கையாளர் தான் பணிபுரியும் இடம், சம்பளம் பற்றிய ஆதாரம் இவற்றை சமர்ப்பித்தால் போதுமானது. இதில், ஆன்-லைன் வர்த்தகத்தில் சில ...
- "எண்ணெய் விலையேற்றத்திற்கு இந்தியாவின் வளர்ச்சி காரணம்'

வாஷிங்டன்: இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அபரிமித பொருளாதார வளர்ச்சி, உலகின் சில பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் ஆகியவை, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டும், அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பும், இப்போது போல எண்ணெய் விலை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு, அமெரிக்காவிற்கு ஒரு விரிவான ஆற்றல் கொள்கை தேவைப்படுவதை உணர்த்துகிறது.இந்தக் கொள்கையைத் தான், அதிபர் ஒபாமா அமல்படுத்தி ...
- கிலானி மீதான வழக்கு:28ம் தேதிக்கு தள்ளி வைப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் கிலானி மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கை இம்மாதம் 28ம் தேதிக்கு, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துவது குறித்த வழக்கில், பிரதமர் கிலானி கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி அவரை கோர்ட் அவமதிப்பு குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.இந்த அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும், எனக் கோரிய கிலானியின் மனுவை சமீபத்தில் கோர்ட் நிராகரித்து விட்டது.இவ்வழக்கில் அட்டர்னி ஜெனரல் அன்வர் உல் ஹக், அரசுத் தரப்பு வழக்கறிஞராக ...
- அர்ஜென்டினா ரயில்விபத்து: 49 பேர் பலி
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் ரயில்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 49 பேர் பலியாகினர். அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் ரயில்நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்று ரயில்நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தின் கடைசிப்பகுதியில் உள்ள தடுப்புப்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் 49 பேர் பலியாயினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தினால் பல ரயில்பெட்டிகள் சேதமடைந்தன காயமடைந்தவர்களை மீட்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான ரயில் விபத்து இது என ...
வர்த்தக செய்திகள்
- 28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம்

புதுடில்லி: தினமும் 28 விமானங்களை இயக்க, கிங் பிஷர் நிறுவனம் முன்வந்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக, கிங் பிஷர் நிறுவனம் கடந்த ஆறு நாட்களாக, பல விமான சர்வீஸ்களை ரத்து செய்துள்ளது. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமானத் துறை டைரக்டர் ஜெனரலின் ...
- கனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வு

புதுடில்லி: சென்ற டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில், 17 ஆயிரத்து 286 கோடி ரூபாய் மதிப்பிற்கு கனிமங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மதிப்பு, சென்ற நவம்பர் மாதத்தில் 15 ஆயிரத்து 692 கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது என, மத்திய கனிமங்கள் அமைச்சகம் ...
- தொடரும் மின்வெட்டு பிரச்னையால்அவசர கால மின் விளக்குகளுக்கு மவுசு

சேலம்: தமிழக மக்களுக்கு மின்வெட்டு பிரச்னை, பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை தொடர்ந்து, மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு குறைந்து காணப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக மீண்டும், அதே நிலை ...
- நாட்டின் மறைமுக வரி வசூல் இலக்கு எட்டப்படும்

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வசூல் இலக்கு எட்டப்படும் என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.புதுடில்லியில், சுங்கம் மற்றும் மத்திய கலால் வரி அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி விருது வழங்கும் ...
சினிமா
- சாந்தகுமார் இயக்கத்தில் கார்த்தி...?
சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்து, சாந்த குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். ஆர்ப்பாட்டமாய், ஆரவாரமாய் வெளிவரும் படங்களுக்கு மத்தியில், சமீபத்தில் புதுமுகம் சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில், படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு மெளனமாய் வந்து, மாபெரும் வெற்றி பெற்ற படம் மெளன ... - பிகினி உடையில் லட்சுமிராய்!
தெலுங்குப்படமொன்றில் பிகினி உடையணிந்து நடித்திருக்கிறார் நடிகை லட்சுமிராய். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் லட்சுமிராய், புதிய தமிழ்ப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்குப்பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போயிருக்கும் லட்சுமிராய், நடிக்கும் அதிநாயகடு படத்தை ... - பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னையால் சினிமா சூட்டிங் முடக்கம்! கோலிவுட்டிற்கு ரூ.100 கோடி நஷ்டம்...!
ஒரு மாத காலமாக நீடித்து வரும் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னையால், கோலிவுட்டிற்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி நஷ்டமாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பெப்சி தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டுக்கான சம்பளம் இன்னும் உயர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக பெப்சி சங்கத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ... - நடிகர் சைப் அலிகான் கைதாகி விடுதலை!
மும்பையில் வெளிநாட்டு அதிகாரியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நடிகர் சைப் அலீகான், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மும்பை ஜுகு பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் சர்மா. இவர் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் துணை இயக்குனராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இக்பால், மும்பை கொலாபா தாஜ் ஓட்டலில் உள்ள வாசாபி உணவகத்துக்கு ... - சீனியர் நடிகர்களுடன் நடித்தால் கிழவி என்பதா? த்ரிஷா கோபம்!
கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததால் என்னை கிழவியாக பார்க்கக் கூடாது என்று நடிகை த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார். த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதால் இளம் நடிகர்கள் அவருக்கு ஜோடியாக நடிக்க தயங்குவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. த்ரிஷாவும் அவ்வப்போது மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ... - வாய்ப்புக்காக பொய் சொல்கிறார்! அசின் மீது டைரக்டர் கோபம்!
வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கண்டபடி பொய் சொல்வதாக நடிகை அசின் மீது பிரபல சினிமா டைரக்டர் ரோஹித் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்கும் நடிகை பற்றி இன்னமும் முடிவு செய்யப்படாத ... - சென்னையில் வீடு வாங்கினார் அமலா பால்!
சென்னையில் வீடு வாங்கியிருக்கும் நடிகை அமலா பால், சென்னையிலேயே தங்கியிருந்து கலைச்சேவையாற்றப் போகிறார். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமலா பால். அடுத்தடுத்து மைனா, தெய்வத்திருமகன் போன்ற வெற்றிப்படங்களில் அம்மணியை வெற்றி நாயகியாக தமிழ்சினிமா கொண்டாடி வருகிறது. அவ்வப்போது கிசுகிசுக்களில் ... - மணந்தால் ஆஞ்சநேயன்...! அனன்யா உறுதி!
ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியும் என்றும், அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் நடிகை அனன்யா. நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனன்யா. மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் ... - வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் புகழ் முத்துராஜா மரணம்...!
மிஷ்கினின், "சித்திரம் பேசுதடி" படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்... பாடல் மூலம் பிரபலமானவர்கள் 3 பேர். ஒருவர் மாளவிகா, இன்னொருவர் அந்தப்பாட்டை பாடிய கானா உலகநாதன், மற்றொருவர் கானா உலகநாதன் பாடும்போது அவருக்கு மைக் பிடித்து வருபவர். அவர் பெயர் முத்துராஜா. அந்தபாட்டு மூலம் பிரபலமான முத்துராஜா தொடர்ந்து களவாணி ...
விளையாட்டு
- கால்பந்து: லிவர்பூல் அபார வெற்றி
லண்டன்: இங்கிலாந்து எப்.ஏ. கோப்பை கால்பந்து தொடர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்தின் லண்டனில் நடந்த இப்போட்டியில் லிவர்பூல், பிரைட்டன் அணிகள் மோதின. போட்டியின் 5வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் மார்டின் முதல் கோல் அடித்தார். பின் 17வது நிமிடம் பிரைட்டன் அணியின் கஜென்கா, பதில் கோல் அடித்தார்.அடுத்து லிவர்பூல் அணியின் ஆன்ட்ரூ, லூயிஸ் சாரஸ் 57, 85வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர். மறுமுனையில், பிரைட்டன் அணி வீரர்கள் தங்கள் அணிக்கு கோல் அடிப்பதற்கு பதில், லிவர்பூல் அணிக்கு கோல் அடிப்பதிலே ஆர்வம் காட்டினர். இந்த அணியின் லியாம் (44, 71) ... - ஏ.சி.மிலன் அபாரம்
செசனா: இத்தாலியன் சிரிஸ் "ஏ' கால்பந்து தொடரில் ஏ.சி.மிலன், செசனா அணிகள் மோதின. இதில் ஏ.சி.மிலன் அணியின் சல்லே, இம்மானுவேல்சன், ரொபினியோ ஆகியோர் 29, 31, 55வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். செசனா அணி சார்பில் டேனியல் (65வது) மட்டும் கோல் அடித்தார். முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி.மிலன் அணி வெற்றி ... - கால்பந்து: நாபோலி அணி வெற்றி
புளோரன்ஸ்: இத்தாலியில் நடக்கும் கால்பந்து தொடரில் நாபோலி அணி 24 வது லீக் போட்டியில், பியோரென்டினா அணியை சந்தித்தது. துவக்கத்தில் இருந்தே நாபோலி அணி அசத்தியது. போட்டியின் 3வது நிமிடத்தில் முதல் கோல் அடித்த எடின்சன் கவானி, 55 வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். கடைசி நிமிடத்தில் (90வது) லாவேஜி, தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 3-0 என்ற கோல் கணக்கில் நாபோலி அணி வெற்றி பெற்றது. மொத்தம் 37 புள்ளிகள் பெற்றுள்ள இந்த அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் ... - ஆஸ்திரேலியன் "ஏ' லீக் கால்பந்து: மெல்போர்ன் வெற்றி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் "ஏ' லீக் கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மெல்போர்ன் ஹார்ட், கோல்டு கோஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் (80வது நிமிடம்), மெல்போர்ன் அணியின் பபாலி ஒரு கோல் அடித்தார். முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் மெல்போர்ன் ஹார்ட் அணி வெற்றி ... - கால்பந்து: மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
ஆம்ஸ்டர்டாம்: ஐரோப்பா கோப்பைக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.ஜெர்மனியில் ஐரோப்பா கோப்பை சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் "ரவுண்டு-32' சுற்றின் முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், அஜாக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணிகள் மோதின.முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் (58வது நிமிடம்) ஆஸ்லே யங், மான்செஸ்டர் அணிக்கு முதல் கோல் அடித்தார். பின் 84வது நிமிடத்தில் சேவியர் ஹெர்னாண்டஸ் இரண்டாவது கோல் அடிக்க, மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ... - அடிலெய்டு வெற்றி
அடிலெய்டு: ஏ.எப்.சி., கால்பந்து தொடரில் அடிலெய்டு யுனைடெட், பெர்சிபுரா அணிகள் மோதின. போட்டியின் 12வது நிமிடத்தில் நைஜல், அடிலெய்டு அணிக்கு கோல் அடித்தார். பின் 57, 84வது நிமிடங்களில் லெவ்சென்கோ, செர்ஜியோ வான் இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் அடிலெய்டு யுனைடெட் அணி வெற்றி ... - அடிலெய்டு வெற்றி
அடிலெய்டு: ஏ.எப்.சி., கால்பந்து தொடரில் அடிலெய்டு யுனைடெட், பெர்சிபுரா அணிகள் மோதின. போட்டியின் 12வது நிமிடத்தில் நைஜல், அடிலெய்டு அணிக்கு கோல் அடித்தார். பின் 57, 84வது நிமிடங்களில் லெவ்சென்கோ, செர்ஜியோ வான் இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் அடிலெய்டு யுனைடெட் அணி வெற்றி ... - ஆர்சனல் அணி தோல்வி
மிலன்: ஐரோப்பா கோப்பை சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இத்தாலியில் நடந்தது. இதில் இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் போட்டியில் ஏ.சி.மிலன், ஆர்சனல் அணிகள் மோதின. இதில் போயட்டெங் (15வது), ரொபினியோ (38, 49வது), இப்ராகிமோவிச் (79வது) ஆகியோர் அடித்த கோல்கள் காரணமாக, ஏ.சி.மிலன் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி ... - கால்பந்து: பராகுவே வெற்றி
லுகோ: சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பராகுவே அணி, சிலியை வீழ்த்தியது.பாராகுவே, சிலி அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி பராகுவேயில் நடந்தது. துவக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றுவிட வேண்டும் என, இரு அணிகளும் போராடின. முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் (45வது), பராகுவே அணிக்கு "பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய எட்கர் பெனிட்டெஜ், கோலாக மாற்றினார்.பின் 72வது நிமிடத்தில் ஜோஸ் மரியா மற்றொரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி தர சிலி எடுத்த முயற்சிகள் வீணானது. முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணி வெற்றி ...
- Log in to post comments