News
English News
தமிழ் செய்திகள்
தற்போதைய செய்திகள்
- சீரடியில் கோத்தபயா ராஜபக்ஷே தரிசனம்
கோபார்கான்: மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபயா ராஜபக்ஷே, சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்தார். கோத்தபயாவுடன், அவரது மனைவி, மகன் உடன் வந்தனர். இதன் பிறகு அவர் கூறுகையில், இங்கு வருடத்திற்கு இரண்டு முறை வருவேன். நான் சாய்பாபாவின் தீவிர பக்தன். நான் சாய்பாபாவின் வரலாற்றை தினமும் வாசிப்பேன். இலங்கையில் சீரடி சாய்பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இந்தியா, இலங்கையும் சகோதர நாடுகள். இலங்கை மக்கள், இந்தியா மீது அதிக ஈர்ப்பு வைத்துள்ளனர் என கூறினார்.



- இஸ்ரோ முறைகேடு: பிரதமருக்கு பா.ஜ., கேள்வி
சென்னை: ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான அறிக்கை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மவுனமாக இருந்து வருவது ஏன் என பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பா.ஜ.,வின் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்த விவகாரத்தில் பிரதமர் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும். ஒப்பந்த முடிவை எடுத்தது யார். அப்போது யார் பொறுப்பாக இருந்தார்கள் என்பதை விளக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். அரசு பணியில் தடை செய்யப்பட்ட விஞ்ஞானிகளுக்கு ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யப்படும் அதிகாரம் இருந்ததா எனவும் கேள்வி எழுப்பினார்.



- யுவராஜ் சிங் உடல்நிலை: மோடி கவலை
ஆமதாபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் உடல்நிலை குறித்து குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி மேலும் கூறியதாவது: யுவராஜ் சிங் உடல்நிலை குறித்து கேள்விபட்டபோது மிகவும் கவலையாக இருந்தது. அவர் போராட்ட குணமுள்ளவர். அவர் விரைவில் குணமடைந்து, மீண்டும் இந்தியா அணிக்காக விரைவில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.



- மின் உற்பத்திக்கு யாரையும் நம்ப தயாராக இல்லை:அமைச்சர் நத்தம் விசுவநாதன்
கமுதி:""மின் உற்பத்திக்கு யாரையும் நம்ப தயாராக இல்லை,'' என அமைச்சர் நத்தம் வி சுவநாதன் தெரிவித்தார்.கமுதி பசும்பொன்னில் அவர் கூறியதாவது: மின் பற்றாக்குறையை சமாளிக்க, வட மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு வர, தனி லைன் வசதி இல்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஒரே லைனில் தான் மின்சாரம் வருகிறது. குஜராத்தில் 500 மெகாவாட் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டும், தனி லைன் இல்லாததால், 225 மெகாவாட் மட்டுமே பெற முடிகிறது. மின் உற்பத்திக்கு இனி யாரையும் நம்ப தயாராக இல்லை, என்றார்.



- 2-ஜி வழக்கின் அடுத்த ‘மூவ்’ : சி.வி.சி.- சி.பி.ஐ. ஆலோசனை
புதுடில்லி: ஸ்பெக்டரம் வழக்கின் அடுத்து கட்டமாக , மேல்நடவடிக்கை குறித்து மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனும், சி.பி.ஐ.யும் சந்தித்து விவாதம் நடத்த உள்ளது. இதனால் இந்த வழக்கி்ல் திருப்பம் ஏற்படுமா என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும். 2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 2-ம தேதி வழங்கிய தீர்ப்பில், 2008-ம் ஆண்டு அப்போதை மத்திய அமைச்சர் ராஜா வழங்கிய 9 நிறுவனங்களுக்கு வழங்கிய 122 லைசென்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க கோரும் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனு மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் விசாரிக்கும் என நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, சிங்வி ஆகியோர் பரபரப்பு தீர்ப்பளித்தனர். சிதம்பரத்தை சேர்க்க கோரும் ,சுப்ரமணியசாமி மனுவை தள்ளுபடி செய்து நேற்று சி.பி.ஐ. சிறப்புகோர்ட் நீதிபதி ஷைனி, உத்தரவிட்டார். இதனால் மத்திய அரசு நிம்மதி அடைந்துள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த ‘மூவ்’ கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனர் பிரதீப் குமாரை, (சி.வி.சி.) சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுப்ரீம் கோர்டின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு நடந்து வருவதால் வழக்கின் வேகம் இன்னும் சூடுபிடித்து வருகிறது. இது குறித்து பா.ஜ., இன்னும் இரண்டு கோர்டுகள் உள்ளன.இவற்றிலிருந்து சிதம்பரம் தப்பிக்கவே முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.இதைதொடர்ந்து இந்த வழக்கு குறித்தும் சுப்ரீம், சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தீர்ப்புகள் குறி்த்தும் லஞ்ச ஒழிப்பு கமிஷனும், சி.பி.ஐ.யும் சந்தித்து ஆலோசனை நடத்தி, புளூபிரிண்ட் ஒன்றினை தயாரித்து விரைவில் அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே இந்த வழக்கு குறித்து சிறப்பு விசாரணைக்குழு (எஸ்.ஐ.டி) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதில் கோர்ட் உதவியுடன் சி.பி.ஐ.யும், சி.வி.சி.யும் தனது அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் 122 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதாக கடந்த 2-ம் தேதிசுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான ஏ.கே. கங்குலி அன்றைய தினமே ஓய்வு பெற்றார். இதனால் வேறு நீதிபதி யாராக நியமிக்கப்படுவர் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.இதனால் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.



- மோடி தேர்தல் பிரசாரத்திற்கு வராதது ஏன்?
ஆமதாபாத்: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ. சார்பில் நரேந்திரமோடி பிரசாரம் செய்யாதது குறித்து முக்கிய தவகல்கள் வெளியாகியுள்ளன. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தற்போது அவர் உண்ணாவிரதத்தினை நடத்தி வருகிறார். அதில் பிசியாக இருப்பதும், சில அரசியல் உட்பகை காரணங்களும் தான் என கூறப்படுகிறது.ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப், மணிப்பூர், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் உ.பி. மற்றும் கோவா மாநிலங்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. முக்கியமாக உ.பி. தேர்தலில் அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதில் தான் இந்தியா முழுக்க எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் பா.ஜ.சார்பில் நட்சத்திர பிரசாரம் செய்யும் தலைவர்களாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றிருந்தனர்.ஆனால் இதுவரை நடந்து முடிந்த மூன்று மாநில தேர்தல்களில் பிரசாரம் செய்ய நரேந்திரமோடி வரவில்லை. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் , மோடி அரசுக்கு எதிராக கோர்டுகளில் லோக்ஆயுக்தா நீதிபதி நியமனம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவ்வப்போது விசாரணைக்கு வருவதும், அதில் சாதகமா ,பாதகமாக உத்தரவுகள் வெளியாகி வருகின்றன. அதிலும் குஜராத் கலவர வழக்கு முக்கியமானதாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மோடி, மதநல்லிணக்கம் வேண்டி உண்ணாவிரதத்தினை கடந்த ஆண்டு செப்டம்பரில் துவக்கினார். பின்னர் சாத்பவனா எனும் மாவட்டந்தோறும் உண்ணாவிரதத்தினையும் துவக்கி அதன் 32 -வது நாள் வரும் 12ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் தனது சொந்த மாநிலத்தில் நிலவியுள்ள சில அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்கவே அவர் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை எனவும், மேலும் முக்கிய மாநிலமான உ.பி.யில் தேர்தல் பொறுப்பாளராக உள்ள சஞ்சய் ஜோஷியுடன் ஏற்கனவே மோடி சில முட்டல் மோதல்கள் இருந்துள்ளதும், மோடியுடன் , ஜோஷிக்கு உள்ள உட்பகை காரணம் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்பதில் அத்வானி, மோடி என்ற வாதமும் உள்ளது. மேலும் வரும் 23-ம் தேதியன்று குஜராத் மாநில சட்டமன்றத்தில் கவர்னர் உரையுடன் , பட்ஜெட் கூட்டத்தொடரும் துவங்க இருப்பதால் மோடியின் பிரசாரப்பயணம் குறித்து இன்னமும் அம்மாநில பா.ஜ. தலைமை தீர்மானிக்கவில்லை என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பாராளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித்தலைவரான சுஷ்மா சுவராஜ், உடல்நிலை காரணமாக பிரசாரத்திற்கு வராமல் போனதும் பா.ஜ.விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



- மகளிர் காவல் நிலையத்தில் தங்கைக்கு வெட்டு: அண்ணன் வெறிச்செயல்
அவினாசி: அவினாசியில் போலீஸ் ஸ்டேசன் உள்ளே, காதலித்த தங்கையினை எஸ்.ஐ.முன்பு வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அனைத்து மகளினர் போலீஸ் நிலையத்திற்கு , நம்பியான் பாளையத்தைச் சேர்ந்த அம்பிகா ,18 என்ற இளம் பெண் ,தனது காதலனுடன் வந்தார். இவர்களது காதல்விவகாரம் குறித்து எஸ்.ஐ. குப்பு ,விசாரித்து பெற்றோரை வரவழைத்தார். அப்போது போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த அம்பிகாவின் அண்ணன் வெள்ளியங்கிரி என்பவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அம்பிகாவின் முதுகில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அம்பிகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வெள்ளியங்கிரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் போலீஸ் நிலையத்திற்குள் நடந்த அரிவாள் வெட்டு சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



- ராகுல் அடுத்த பிரதமரா?: பிரியங்கா பேட்டி
அமேதி:உ.பி.யில் காங். தலைமையிலான நல்லாட்சி வேண்டுமா? அல்லது கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சொகுசு மாளிகையில் வசிக்கும் மாயாவதியின் ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரியாங்கா பேசினார்.உபி. மாநிலத்திற்கு 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 நாட்களாக முகாமிட்டுள்ள அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பிரசாரம் செய்து வரும் பிரியாங்கா டி.வி. சானலுக்கு அளித்த பேட்டி : சகோதரர் ராகுல் முயற்சியல் உபி. மாநிலத்தில் அவரிடம் நல்ல செல்வாக்கு வளர்ந்து வருகிறது. மற்ற கட்சிகளைப்போல் அவர் ஜாதி அரசியல் நடத்தவில்லை. மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். கடந்த முறை அல்லாது தற்போது ராகுலின் பிரசாரத்தினால் இம்முறை காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலைவராக ராகுல் கருதபடுகிறார், அவர் தான் அடுத்த பிரதமர் என்பதனை நான் நினைக்கவில்லை. அது தற்போது தேவையில்லாத ஒன்று. நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங். தலைமையில் நல்லாட்சி வேண்டுமா ? அல்லது பல கோடி ரூபாய் வரிப்பணத்தில் சொகுசு மாளிகையில் வசிக்கும் மயாவாதியின் ஆட்சி வேண்டுமா என்பதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இவ்வாறு பிரியங்கா கூறினார்.



- ஆப்கானில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பலி
காந்தஹர்: ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாயினர். 19 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் காந்தஹர் நகரில் உள்ளது போலீஸ் தலைமை அலுவலக கட்டடம். இங்கு அலுவலகத்தில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு வெடித்தது. இதில் 5 போலீசார் மற்றும் 2 பொதுமக்கள் என 7 பேர் பலியாயினர். 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தலிபான்கள் காரணம் என கூறப்படுகிறது.தற்போது ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ள போதிலும், கடந்த 2011-ம் ஆண்டில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 3 ஆயிரத்து 21 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Other Link : www.trichytoday.com