Welcome To TheDindigulOnline.com

Hot News :
சாயல்குடி அருகே 7 பசுமாடுகள் மர்மசாவு|ராமநாதபுரம் வழுதூர் மின்உற்பத்தி நிலையம் விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சர் விஸ்வநாதன்|விஜயகாந்தை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக விரோதம்: மார்க்சிஸ்ட்|பீடிக்கு காசுகேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து|65 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி|பஞ்சாப், உத்தரகண்டில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்: கட்கரி|ஆப்கனில் குண்டு வெடிப்பு: 6 போலீஸார் சாவு|
Bestoncare
Free Online Dress up Games
Advertise Here
Advertise Here
Advertise Here
  • Healthy eating need not be a drag
    Think healthy food and common perception limits it to salads, soups, egg whites, boiled and bland food.
    Somehow eating healthy ..
  • The quickfix wonder
    When you first hear about it, it sounds like an action flick or some obscure martial arts form. But a little research will tell yo..
  • Keep your heart in the pink of health
    As per the World Health Organization estimates, 60 per cent of the cardiac patients in the world today are Indians.
    By 2025, th..
  • Making yoga work for you
    The best part about yoga is that it understands the complex relationship between the body and mind. The reason why various fitness..
  • 6 pack abs for the lazy ones
    Vibration Amplification of Sound Energy at Resonance, used for body contouring, now helps in getting illusionary abs.
  • Fenugreek: Best way to ward off cold
    The spice's anti-viral properties cures cold and flu symptoms and prevents the conditions starting in the first place.
  • Srikanth gets philosophical
    "When you succeed, the world begins to notice you; but when you fail, they mock you," the 'Nanban' star says.
  • Jackie Chan in Tamil film?
    Rumours are on that the Asian superstar might be roped in for the new post-‘Vishwaroopam’ Kamal Haasan-Shankar flick.
  • Vijay’s parenting tips
    The actor’s son, who is now in Class VII, wants to become a cricketer and Vijay is ready to support him in this pursuit.
  • Hansika furious about false reports
    The actress lashes out at a section of the press for putting out reports linking her with director Prabhu Deva.
  • Katrina comes to Kollywood
    The Bollywood actress is likely to star with superstars Rajnikanth and Kamal Haasan in their respective new films.
  • Reema Sen to tie the knot!
    The actress is to wed her friend Shiv Karan Singh, a well-known restaurateur, at a farmhouse in Delhi on March 11.
  • யுவராஜ் சிங் உடல்நிலை: மோடி கவலை
    ஆமதாபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் உடல்நிலை குறித்து குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி மேலும் கூறியதாவது: யுவராஜ் சிங் உடல்நிலை குறித்து கேள்விபட்டபோது மிகவும் கவலையாக இருந்தது. அவர் போராட்ட குணமுள்ளவர். அவர் விரைவில் குணமடைந்து, மீண்டும் இந்தியா அணிக்காக விரைவில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.


  • மின் உற்பத்திக்கு யாரையும் நம்ப தயாராக இல்லை:அமைச்சர் நத்தம் விசுவநாதன்
    கமுதி:""மின் உற்பத்திக்கு யாரையும் நம்ப தயாராக இல்லை,'' என அமைச்சர் நத்தம் வி சுவநாதன் தெரிவித்தார்.கமுதி பசும்பொன்னில் அவர் கூறியதாவது: மின் பற்றாக்குறையை சமாளிக்க, வட மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு வர, தனி லைன் வசதி இல்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஒரே லைனில் தான் மின்சாரம் வருகிறது. குஜராத்தில் 500 மெகாவாட் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டும், தனி லைன் இல்லாததால், 225 மெகாவாட் மட்டுமே பெற முடிகிறது. மின் உற்பத்திக்கு இனி யாரையும் நம்ப தயாராக இல்லை, என்றார்.


  • 2-ஜி வழக்கின் அடுத்த ‘மூவ்’ : சி.வி.சி.- சி.பி.ஐ. ஆலோசனை
    புதுடில்லி: ஸ்பெக்டரம் வழக்கின் அடுத்து கட்டமாக , மேல்நடவடிக்க‌ை ‌குறித்து மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனும், சி.பி.‌ஐ.யும் சந்தித்து விவாதம் நடத்த உள்ளது. இதனால் இந்த வழக்கி்ல் திருப்பம் ஏற்படுமா என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும். 2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 2-ம தேதி வழங்கிய தீர்ப்பில், 2008-ம் ஆண்டு அப்போதை மத்திய அமைச்சர் ராஜா வழங்கிய 9 நிறுவனங்களுக்கு வழங்கிய 122 லைசென்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க ‌கோரும் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனு மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் விசாரிக்கும் என நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, சிங்வி ஆகியோர் பரபரப்பு தீர்ப்பளித்தனர். சிதம்பரத்தை சேர்க்க கோரும் ,சுப்ரமணியசாமி மனுவை தள்ளுபடி செய்து நேற்று சி.பி.ஐ. சிறப்புகோர்ட் நீதிபதி ‌ஷைனி, உத்தரவிட்டார். இதனால் மத்திய அரசு நிம்மதி அடைந்துள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த ‘மூவ்’ கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனர் பிரதீப் குமார‌ை, (சி.வி.சி.) சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுப்ரீம் கோர்டின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு நடந்து வருவதால் வழக்கின் வேகம் இன்னும் சூடுபிடித்து வருகிறது. இது குறித்து பா.ஜ., இன்னும் இரண்டு கோர்டுகள் உள்ளன.இவற்றிலிருந்து சிதம்பரம் தப்பிக்கவே முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.இதைதொடர்ந்து இந்த வழக்கு குறித்தும் சுப்ரீம், சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தீர்ப்புகள் குறி்த்தும் லஞ்ச ஒழிப்பு கமிஷனும், சி.பி.‌ஐ.யும் சந்தித்து ஆலோசனை நடத்தி, புளூபிரிண்ட் ஒன்றினை தயாரித்து விரைவில் அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே இந்த வழக்கு குறித்து சிறப்பு விசாரணைக்குழு (எஸ்.ஐ.டி) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதில் கோர்ட் உதவியுடன் சி.பி.ஐ.யும், சி.வி.சி.யும் தனது அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் 122 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதாக கடந்த 2-ம் தேதிசுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான ஏ.‌கே. கங்குலி அன்றைய தினமே ஓய்வு பெற்றார். இதனால் வேறு நீதிபதி யாராக நியமிக்கப்படுவர் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.இதனால் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.


  • மோடி தேர்தல் பிரசாரத்திற்கு வராதது ஏன்?
    ஆமதாபாத்: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ. சார்பில் நரேந்திரமோடி பிரசாரம் செய்யாதது குறித்து முக்கிய தவகல்கள் வெளியாகியுள்ளன. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தற்போது அவர் உண்ணாவிரதத்தினை நடத்தி வருகிறார். அதில் பிசியாக இருப்பதும், சில அரசியல் உட்பகை காரணங்களும் தான் என கூறப்படுகிறது.ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப், மணிப்பூர், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் உ.பி. மற்றும் கோவா மாநிலங்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. முக்‌கியமாக உ.பி. தேர்தலில் அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதில் தான் இந்தியா முழுக்க எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் பா.ஜ.சார்பில் நட்சத்திர பிரசாரம் செய்யும் தலைவர்களாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்தி‌ரமோடி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றிருந்தனர்.ஆனால் இதுவரை நடந்து முடிந்த மூன்று மாநில தேர்தல்களில் பிரசாரம் செய்ய நரேந்திரமோடி வரவில்லை. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் , மோடி அரசுக்கு எதிராக கோர்டுகளில் லோக்ஆயுக்தா நீதிபதி நியமனம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவ்வப்போது விசாரணைக்கு வருவதும், அதில் சாதகமா ,பாதகமாக உத்தரவுகள் வெளியாகி வருகின்றன. அதிலும் குஜராத் கலவர வழக்கு முக்கியமானதாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மோடி, மதநல்லிணக்கம் வேண்டி உண்ணாவிரதத்தினை கடந்த ஆண்டு செப்டம்பரில் துவக்கினார். பின்னர் சாத்பவனா எனும் மாவட்டந்தோறும் உண்ணாவிரதத்தினையும் துவக்கி அதன் 32 -வது நாள் வரும் 12ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் தனது சொந்த மாநிலத்தில் நிலவியுள்ள சில அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்கவே அவர் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை எனவும், மேலும் முக்கிய மாநிலமான உ.பி.யில் தேர்தல் பொறுப்பாளராக உள்ள சஞ்சய் ஜோஷியுடன் ஏற்கனவே ‌மோடி சில முட்டல் மோதல்கள் இருந்துள்ளதும், ‌மோடியுடன் , ஜோஷிக்கு உள்ள உட்பகை காரணம் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்பதில் அத்வானி, மோடி என்ற வாதமும் உள்ளது. மேலும் வரும் 23-ம் தேதியன்று குஜராத் மாநில சட்டமன்றத்தில் கவர்னர் உரையுடன் , பட்ஜெட் கூட்டத்தொடரும் துவங்க இருப்பதால் மோடியின் பிரசாரப்பயணம் குறித்து இன்னமும் அம்மாநில பா.ஜ. தலைமை தீர்மானிக்கவில்லை என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பாராளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித்தலைவரான சுஷ்மா சுவராஜ், உடல்நிலை காரணமாக பிரசாரத்திற்கு வராமல் போனதும் பா.ஜ.விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


  • மகளிர் காவல் நிலையத்தில் தங்கைக்கு வெட்டு: அண்ணன் வெறிச்செயல்
    அவினாசி: அவினாசியில் போலீஸ் ஸ்டேசன் உள்ளே, காதலித்த தங்கையினை எஸ்.ஐ.முன்பு வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அனைத்து மகளினர் போலீஸ் நிலையத்திற்கு , நம்பியான் பாளையத்தைச் சேர்ந்த அம்பிகா ,18 என்ற இளம் பெண் ,தனது காதலனுடன் வந்தார். இவர்களது காதல்விவகாரம் குறித்து எஸ்.ஐ. குப்பு ,விசாரித்து பெற்றோரை வரவழைத்தார். அப்போது போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த அம்பிகாவின் அண்ணன் வெள்ளியங்கிரி என்பவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அம்பிகாவின் முதுகில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அம்பிகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வெள்ளியங்கிரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் போலீஸ் நிலையத்திற்குள் நடந்த அரிவாள் வெட்டு சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


  • ராகுல் அடுத்த பிரதமரா?: பிரியங்கா பேட்டி
    அமேதி:உ.பி.யில் காங். தலைமையிலான நல்லாட்சி வேண்டுமா? அல்லது கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சொகுசு மாளிகையில் வசிக்கும் மாயாவதியின் ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரியாங்கா பேசினார்.உபி. மாநிலத்திற்கு 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 நாட்களாக முகாமிட்டுள்ள அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பிரசாரம் செய்து வரும் பிரியாங்கா டி.வி. சானலுக்கு அளித்த பேட்டி : சகோதரர் ராகுல் முயற்சியல் உபி. மாநிலத்தில் அவரிடம் நல்ல செல்வாக்கு வளர்ந்து வருகிறது. மற்ற கட்சிகளைப்போல் அவர் ஜாதி அரசியல் நடத்தவில்லை. மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். கடந்த முறை அல்லாது தற்போது ராகுலின் பிரசாரத்தினால் இம்முறை காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலைவராக ராகுல் கருதபடுகிறார், அவர் தான் அடுத்த பிரதமர் என்பதனை நான் நினைக்கவில்லை. அது தற்போது தேவையில்லாத ஒன்று. நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங். தலைமையில் நல்லாட்சி வேண்டுமா ? அல்லது பல ‌கோடி ரூபாய் வரிப்பணத்தில் சொகுசு மாளிகையில் வசிக்கும் மயாவாதியின் ஆட்சி வேண்டுமா என்பதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இவ்வாறு பிரியங்கா கூறினார்.


  • ஆப்கானில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பலி
    காந்தஹர்: ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாயினர். 19 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் காந்தஹர் நகரில் உள்ளது போலீஸ் தலைமை அலுவலக கட்டடம். இங்கு அலுவலகத்தில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு ‌வெடித்தது. இதில் 5 போலீசார் மற்றும் 2 பொதுமக்கள் என 7 பேர் பலியாயினர். 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தலிபான்கள் காரணம் என கூறப்படுகிறது.தற்போது ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ள போதிலும், கடந்த 2011-ம் ஆண்டில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 3 ஆயிரத்து 21 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • கோவாவில் காங்.அரசில் கூட்டணி கட்சி விலகல்
    பானாஜி: கோவா மாநிலத்தில் ஆளும் காங். கூட்டணி அரசில் முக்கிய கட்சி தனது ஆதரவினை விலக்கி கொண்டது. இதனால் அம்மாநில முதல்வருக்கு சிக்கல் ஏற்பட்டு்ள்ளது. கோவா மாநிலத்திற்கு வரும் மார்ச் 3-ம தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியின் முதல்வராக திகம்பர் காமத் உள்ளார். மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசில் மகாராஷ்டிரவதி கோமந்த் கட்சி அங்கம் வகித்து வந்தது.இந்நிலையில் அக்கட்சி தனது ஆதரவினை விலக்கி கொள்வதாக அறிவித்தது.இது குறித்து அக்கட்சியின் தலைவர் தீபக்தல்வாலிக்கர் கூறுகையில், மாநிலத்திற்கு வரும் மார்ச் 3-ம தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவின்படி காங்கிரஸ் அரசுக்கு அளித்தஆதரவினை விலக்கி கொள்ள முடிவு செய்யபபட்டதாக கூறினார். அதன்படி தங்களது விலகல் கடிதத்தினை கவர்னர் சங்கரநாராயணனிடமும், சபாநாயகர் பிரதாப்சிங் ரானேயிடமும் அளித்துள்ளதாக கூறினார்.இதனால் முதல்வர் திகம்பர் காமத் அரசிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் கூட்டணி கட்சியினரின் முடிவு கோவா அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக மகாராஷ்டிரவதி கேமந்த் கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா தல்வாலிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது பா.ஜ.வுடன் கூட்டணி குறித்து அக்கட்சி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


  • எலக்ட்ரானிக் குடோனில் தீ: ரூ.பல கோடி சேதம்
    பெங்களூரு: கர்நாடகாவில், எலக்டரானிக் பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ. பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. கர்நாடகவில் பெங்களுரூவி்ல் நல்லமங்களா நகரில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கிய குடோன் ஒன்று உள்ளது . இக்குடோனில் இன்று காலை 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தினால், குடோனில் இருந்த வாஷிங் மிஷன்கள், மைக்ரோஓவன்கள், ரிப்ரிஜிரேட்டர்கள் உள்பட பல எ‌லக்ட்ரானிக் பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. இதன் சேத மதிப்பு ரூ. பல கோடி கணக்கிடப்பட்டுள்ளது. சேத மதிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 21-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


  • நிதிநெருக்கடி : 13 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்றுகிறது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

    டெக்ஸாஸ் : கடும் நிதி நெருக்கடியை சந்தித்து இருக்கும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், 13 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் இயங்கி வரும் முக்கிய விமானங்களில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் கடும் நிதி ...

  • டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் மொத்த லாபம் ரூ. 513 கோடி

    மருந்து பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 513 கோடி ரூபாயை மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 87.80 ...

  • பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.6,124 கோடி டிவிடெண்டு

    மும்பை: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.) ஆகிய இரு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, 6,124 கோடி ரூபாயை டிவிடெண்டாக வழங்க முடிவு செய்துள்ளன என, மத்திய நிலக்கரி அமைச்சகம் ...

  • ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ரூ.5,700 கோடியாக சரிவு

    சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 114 கோடி டாலராக (5,700 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 2 சதவீதம் (116 கோடி டாலர் - 5,800 கோடி ரூபாய்) குறைவாகும் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு ...

  • இந்திய நிறுவனங்களின் அயல்நாட்டு முதலீடு 80 கோடி டாலர்

    மும்பை : இந்திய நிறுவனங்கள், சென்ற ஜனவரி மாதத்தில், வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு, 79.70 கோடி டாலராக (3,985 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 45 சதவீதம் (146 கோடி டாலர் - 7,300 கோடி ரூபாய்) குறைவாகும் என ரிசர்வ் வங்கி ...

  • எல்.ஐ.சி.ஹவுசிங் பைனான்ஸ் மொத்த வருவாய் ரூ.1,593 கோடி

    மும்பை : வீட்டு வசதிக்கு நிதி உதவி அளிக்கும் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 306 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 43 சதவீதம் (213 கோடி ரூபாய்) அதிகமாகும்.

    இதே ...

  • அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.3,365 கோடி அதிகரிப்பு

    மும்பை : நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற ஜனவரி, 27ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 67.30 கோடி டாலர் (3,365 கோடி ரூபாய்) உயர்ந்து, 29 ஆயிரத்து 390 கோடி டாலராக (14 லட்சத்து 69 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் ...

  • இறக்குமதி செய்யப்பட்ட ஆலோசனை உதவாது:தமிழ் கட்சிக்கு ராஜபக்ஷே அறிவுரை

    கொழும்பு":தமிழர்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்கு, "இறக்குமதி செய்யப்பட்ட' அல்லது "அன்னிய' ஆலோசனைகள் உதவாது என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.இலங்கையில், தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து, அரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டணிக்கும் (டி.என்.ஏ.,) இடையில், பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும், முக்கியமான பிரச்னைகளில் இன்னும் இருதரப்பும், ஒரு தீர்வை எட்டவில்லை. குறிப்பாக, அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் பார்லிமென்ட் குழுவில், தமிழர் கட்சியும் பங்கேற்க வேண்டும் என, அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், போலீஸ் மற்றும் நில அதிகாரப் ...

  • அவதூறு பிரசாரம் செய்யும் மனித உரிமை அமைப்புகள்:இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

    கொழும்பு: இலங்கை குறித்து, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அவதூறு பிரசாரம் மேற்கொள்வதாக, குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு அமைச்சர், சுவிட்சர்லாந்தில் இம்மாதம் நடக்க உள்ள ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், தன் மீதான குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.இலங்கையில், 2009ல் நடந்த இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்த, போர்க் குற்ற நடவடிக்கைகள் குறித்து, ஐ.நா., தனியாக விசாரித்து அறிக்கை வெளியிட்டது. அதை நிராகரித்த இலங்கை அரசு, கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க கமிஷன் (எல்.எல்.ஆர்.சி.,) என்ற பெயரில் தனியாக, ஒரு குழு அமைத்து ...

  • ரஷ்ய பிரதமர் புடினை எதிர்த்துஆயிரக்கணக்கானோர் பேரணி

    மாஸ்கோ: ரஷ்யவில் பிரதமர் விளாடிமிர் புடினை எதிர்த்தும், ஆதரித்தும் பேரணி நடந்தது.ரஷ்யாவில் கடந்தாண்டு டிச., 4ம் தேதி நடந்த பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் புடினின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி, பல மோசடிகளைச் செய்து வெற்றி பெற்றது. இதற்கு மக்களும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்தாண்டு டிசம்பரில் மட்டும் புடினுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்ட பேரணிகள், இரு முறை நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக, தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக்கணக்கானோர் புடினை எதிர்த்து, கோஷம் எழுப்பியபடி, பேரணி நடத்தினர். ஆதரவுப் பேரணியில் ஒரு ...

  • பாகிஸ்தான் அரசு, ராணுவம்மீண்டும் மோதல் ஆரம்பம்?

    இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் மெமோகேட் விவகாரத்தில், அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல், சமீபத்தில் தான் சிறிது, சிறிதாக தணிக்கப்பட்டது. இந்நிலையில், ராணுவ நிலங்கள் மற்றும் கன்டோன்மென்ட்டுகள் துறைக்குத் தலைவராக, ராணுவ உயர் அதிகாரியை நியமிப்பதா, அல்லது அரசு சார்பில் குடிமை அதிகாரியை நியமிப்பதா என்பதில் தற்போது மோதல் எழுந்துள்ளது. அத்துறைத் தலைவர் அதர் உசேன் ஷாவின் பதவிக் காலம், இம்மாதம் 20ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து, தாரிர் மசூத் என்ற ராணுவ உயர் அதிகாரியைத் தலைவராக நியமிக்கும்படி ராணுவம், பிரதமருக்குக் கடிதம் அனுப்பியதாகத் ...

  • வான்கோவர் தீவில் நிலநடுக்கம்

    அப்லெட் : பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கோவர் தீவின் மேற்கு பகுதியில் உள்ள அப்லெட்டில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் 5.7 ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கொலரோடோவில் உள்ள தேசிய நிலநடுக்க தகவல் மையம், சுனாமி பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியிட்டுள்ளது. வான்கோவர் மற்றும் விக்டோரியா மாகாண பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். ...

  • முத்தரப்பு கிரிக்கெட் இன்று துவக்கம்

    மெல்போர்ன் : இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆஸி.,யின் மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இன்றைய போட்டியில், ஆட்ட நாயகன் சச்சின் இடம் பெறுவதால், அவரின் 100வது சதம் அடிக்கும் முயற்சி இன்று நிறைவேறும் என ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. ...

  • முத்தரப்பு தொடர் இந்தியா படுதோல்வி

    மெல்போர்ன்: முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இ‌ன்றைய முதல் ஒருநாள்போட்டியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 32 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. 217 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு தொடர்ந்து விளையாடிய இந்தியாவிற்கு ஆரம்பம் முதலே விக்கெட் சரிவு ஏற்பட்டது. இறுதியில் இந்தியா 29.04 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் எடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 32 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ...

  • பிலிப்பைன்சில் மாநகர மேயர் சுட்டுக்கொலை

    மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் மாநகராட்சி மேயர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் , காரங்கலான் மாநகர மேயராக இருந்தவர் ரெஸ்டியூடோ அபாத், இவர் குயிம்பா நகரின் சாரானே கிராமத்திற்கு காரில் சென்று‌கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மேயரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். , இடது கை, கழுத்து, தோள்பட்டையி்ல் குண்டுகாயங்களுடன் மருத்துவம‌னையி்ல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைபலனின்றிஇறந்தார். போலீசார் விசாரணை நடத்தி ஒருவர் கைது ...

  • பதவி விலகு : சிரியா அதிபருக்கு ஒபாமா ‌எச்சரிக்கை

    வாஷிங்டன்:சிரியாவில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. இனிமேலும் அதிபர் பதவி வகிக்க பஷீர் ஆசாத்திற்கு உரிமை இல்லை என அதிபர் ஒபாமா கூறினார்.சிரியாவில் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகி்ன்றனர். மேலும் ராணுவத்தினரின் அதிருப்தியாளர்கள் சிலரும் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளதால் கடந்த சில மாதங்களாக கலவரத்தில் பலர் கொல்லப்பட்டு வருகி்ன்றனர்.நேற்று நடந்த கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையி்ல், சிரியாவின் நடந்து ...

  • மெஸ்சி சொதப்பல்
    வாலன்சியா: கோபா டெல் ரே கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியை, மெஸ்சியின் சொதப்பலால் பார்சிலோனா அணி "டிரா' செய்தது.ஸ்பெயினில் கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் பார்சிலோனா, வாலன்சியா அணிகள் மோதின. 27வது நிமிடத்தில் வாலன்சியாவின் ஜோனாஸ் முதல் கோல் அடித்தார். பார்சிலோனாவின் கார்லஸ் புயோல் 35வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். 57வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி' வாய்ப்பை, நட்சத்திர வீரர் மெஸ்சி வீணடிக்க, போட்டி 1-1 என்ற கணக்கில் "டிரா' ...
  • கால்பந்து அரங்கில் கலவரம்! *வன்முறையில் 74 பேர் பலி *1000 ரசிகர்கள் காயம்
    கெய்ரோ: எகிப்தில் நடந்த கால்பந்து போட்டியின் போது, ரசிகர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 74 பேர் பலியாகினர். வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிர்கள் காயமடைந்தனர். எகிப்தின் ஸ்போர்ட் செட் என்ற இடத்தில் அல்-மஸ்ரி, அல்-அஹ்லி அணிகள் மோதிய உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இரு அணிகளும் பரம எதிரி என்பதால், இப்போட்டியை காண 40 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர். அல்-மஸ்ரி ரசிகர்கள், கத்தி, பாட்டில்கள், கம்புகளுடன் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த அல்-அஹ்லி ரசிகர்கள், உள்ளூர் அணியை அவமதிக்கும் வகையிலான "பேனரை காட்டியுள்ளனர். இதனால், ...
  • கால்பந்து: சந்தர்லாண்டு அணி வெற்றி
    சந்தர்லாண்டு: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் சந்தர்லாண்டு அணி, நார்விச் சிட்டி அணியை 3-0 என வீழ்த்தியது. இங்கிலாந்தில் நடக்கும் இத்தொடரின் லீக் போட்டியில் சந்தர்லாண்டு அணி, நார்விச் சிட்டி அணிகள் மோதின. இதில் துவக்கத்தில் இருந்தே சந்தர்லாண்டு அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 21, 28 வது நிமிடத்தில் கேம்பல், ஸ்டீபெனே இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர். 54வது நிமிடத்தில் நார்விச் சிட்டி வீரர் டேனியல், "சேம்சைடு' கோல் அடித்தார். முடிவில் 3-0 என, சந்தர்லாண்டு அணி வென்றது. மற்றோரு போட்டியில் நியூகாஸ்டில் அணி, பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணியை (2-0) ...
  • ஐ-லீக் கால்பந்து: கோவா அணி வெற்றி
    மார்கோ: ஐ-லீக் கால்பந்து போட்டியின் 18வது சுற்றில் கோவா அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐந்தாவது ஐ-லீக் கால்பந்து போட்டி நடக்கிறது. இதன் 18வது சுற்றில் கோவா எஸ்.சி., அணி, புனே எப்.சி., அணியை எதிர்கொண்டது. இதில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ஷில்லாங் எப்.சி., அணி, எச்.ஏ.எல்., எஸ்.சி., அணியை 1-0 என வீழ்த்தியது. 18 சுற்றுகளின் முடிவில், டெம்போ (40), ஈஸ்ட் பெங்கால் (34), மோகன் பகான் (33) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ...
  • இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து: ஸ்டிரோக் சிட்டி தோல்வி
    ஓல்டு டிரபோர்டு: இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் ஸ்டிரோக் சிட்டி அணி தோல்வியடைந்தது.இங்கிலாந்தில் நடக்கும் இத்தொடரின் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், ஸ்டிரோக் சிட்டி அணிகள் மோதின. மான்செஸ்டர் அணிக்கு கிடைத்த இரண்டு "பெனால்டி' வாய்ப்புகளையும் (38, 53வது நிமிடம்), ஹெர்ணான்டஸ், பெர்படோவ் கோலாக மாற்றினர். ஸ்டிரோக் சிட்டி சார்பில் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் 2-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வென்றது.மற்றோரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி, எவர்ட்டான் அணியிடம் (0-1) தோற்றது. பிற போட்டிகளில் லிவர்பூல், டாட்டன்ஹாம் ...
  • ஐ-லீக் கால்பந்து: மோகன் பகான் வெற்றி
    கோல்கட்டா: ஐ-லீக் கால்பந்து போட்டியின் 18வது சுற்றில் மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐந்தாவது ஐ-லீக் கால்பந்து போட்டி நடக்கிறது. இதன் 18வது சுற்றில் மோகன் பகான், சிராக் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இதில் மோகன் பகான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், டெம்போ அணி, மும்பை எஸ்.சி., அணியை 2-0 என வீழ்த்தியது. 18 சுற்றுகளின் முடிவில், டெம்போ (40), ஈஸ்ட் பெங்கால் (34), மோகன் பகான் (33) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ...
  • கால்பந்து: ஐவரி கோஸ்ட் வெற்றி
    கபான்: ஆப்ரிக்க தேசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஐவரி கோஸ்ட் அணி வெற்றி பெற்றது.ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையிலான இத்தொடரின் "பி' பிரிவு லீக் போட்டியில் ஐவரி கோஸ்ட், அங்கோலா அணிகள் மோதின. ஐவரி கோஸ்ட் அணிக்கு இம்மானுவேல் 33 வது நிமிடத்திலும், வில்பிரட் 64வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். அல்கோலா அணி சார்பில் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் 2-0 என்ற கணக்கில் ஐவரி கோஸ்ட் அணி வெற்றி பெற்றது.பர்கினா பாசோ அணிக்கு எதிரான மற்றொரு போட்டியில், சூடான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ...
  • கால்பந்து: பிரயாக் யுனைடெட் வெற்றி
    கோல்கட்டா: ஐ-லீக் கால்பந்து போட்டியின் 18வது சுற்றில் பிரயாக் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐந்தாவது ஐ-லீக் கால்பந்து போட்டி நடக்கிறது. இதன் 18வது சுற்றில் பிரயாக் யுனைடெட், ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொண்டது. இதில் பிரயாக் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டெம்போ, சல்கோகர் எஸ்.சி., அணிகள் மோதிய மற்றொரு போட்டி, கோல் எதுவுமின்றி "டிரா' ஆனது. 18 சுற்றுகளின் முடிவில், டெம்போ (37), ஈஸ்ட் பெங்கால் (34), பிரயாக் யுனைடெட் (32) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ...
  • கோப்பை வென்றது அமெரிக்கா
    வான்கூவர்: லண்டன் ஒலிம்பிக் கால்பந்து தகுதி சுற்று தொடரில், அமெரிக்க அணி சாம்பியன் கோப்பை வென்றது. வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளுக்காக, லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்று கால்பந்து தொடர் கனடாவின் வான்கூவரில் நடந்தது. இத்தொடரின் பைனலில் அமெரிக்கா, கனடா அணிகள் மோதின. இதில் துவக்கத்தில் இருந்தே அசத்திய அமெரிக்க அணிக்கு வாம்பாக், அலெக்ஸ் மார்கன் ஆகியோர் கைகொடுக்க, 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இதில் தோல்வியடைந்த கனடாவும், லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றது. ...
Advertise Here
Other Link :  www.trichytoday.com