Welcome To TheDindigulOnline.com

Hot News :
அடையாள அட்டை விவகாரம்: நந்தன் நில்கேனியுடன் சிதம்பரம் சமரசம்!|சசிகலா உறவினர் ராவணன் கைது|பொன்னேரியில் பலசரக்கு கடையின் ஜன்னலை நீக்கி 50ஆயிரம் திருட்டு|முதல்வர் பாதுகாப்பு அதிகாரி நியமனம்|ரயில் ஏறியதில், தண்டவாளத்தில் படுத்திருந்தவர் சாவு|திருத்தங்கலில் கத்தியை காட்டிமிரட்டு பணம் பறிக்க முயன்ற இருவர் கைது|திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சேர்த்தி வைபவம்|
Bestoncare
Free Online Dress up Games
Advertise Here
Advertise Here
Advertise Here
  • Healthy eating need not be a drag
    Think healthy food and common perception limits it to salads, soups, egg whites, boiled and bland food.
    Somehow eating healthy ..
  • The quickfix wonder
    When you first hear about it, it sounds like an action flick or some obscure martial arts form. But a little research will tell yo..
  • Keep your heart in the pink of health
    As per the World Health Organization estimates, 60 per cent of the cardiac patients in the world today are Indians.
    By 2025, th..
  • Making yoga work for you
    The best part about yoga is that it understands the complex relationship between the body and mind. The reason why various fitness..
  • 6 pack abs for the lazy ones
    Vibration Amplification of Sound Energy at Resonance, used for body contouring, now helps in getting illusionary abs.
  • Fenugreek: Best way to ward off cold
    The spice's anti-viral properties cures cold and flu symptoms and prevents the conditions starting in the first place.
  • சென்னை கலெக்டர் விடுவிப்பு
    சென்னை: சென்னை கலெக்டர் மதுமதி, சேலம் மாநகராட்சி கமிஷனர் லட்சுமிபிரியா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாவட்ட கலெக்டர் மதுமதி தனது பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார். சேலம் மாநகராட்சி கமிஷனர் லட்சுமி பிரியா, திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி, மதுமதி சென்னை கலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவி ஏற்ற மூன்றே நாட்களில் அவர், பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • திகார் கைதிகள் 142 பேர் வேலைக்கு தேர்வு
    புதுடில்லி: டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) நடந்தது. இதில், 142 கைதிகள் பல்வேறு நிறுவனங்களால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். டில்லி திகார் சிறையில் கைதிகள் விடுதலையாகும்போது, அவர்களில் படித்தவர்களுக்கு, பல நிறுவனங்களில், வேலை வாய்ப்பு வழங்க வளாக நேர்காணல் நடந்தது. இது குறித்து சிறை அதிகாரி சுனில் குப்தா குறிப்பிடுகையில், "கடந்த ஆண்டு திகார் சிறையில் நடந்த 2 வளாக நேர்காணலில், 192 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று (நேற்று) நடந்த நேர்காணலில், 175 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 142 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு 84 ஆயிரம் முதல், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. அவர்களில் 13 பேர் பெண்கள். சாகில் குலாஸ்தி, ஹேமந்த் குமார், முகமது ஆசிப் என்ற மூன்று கைதிகளுக்கு, ஆண்டுக்கு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது' என்றார்.


  • கோவை மத்திய சிறையில் ராவணன் அடைப்பு
    மேட்டுப்பாளையம்: கான்ட்ராக்டரை கடத்தி, கொலை மிரட்டல் விடுத்து, 10 லட்சம் ரூபாய் பறித்த புகாரில், சசிகலாவின் நெருங்கிய உறவினர் ராவணன் இன்று இரவு 9.30 மணியளவில் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி ரபி உத்தரவிட்டதையடுத்து, அவர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


  • புத்தி சந்திரன் கட்சி பதவி பறிப்பு
    சென்னை: நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பதவியிலிருந்து புத்தி சந்திரன் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்ட செயலராக இருக்கும் புத்திசந்திரன் எம்.எல்.ஏ., ஜெ., பேரவை செயலராக இருக்கும் சுரேஷ்குமார், மாணவர் அணிச் செயலர் நந்தகுமார், உதகமண்டலம் தொகுதி பொறுப்பாளர் அர்ஜுன் ஆகியோர், அப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக, நீலகிரி மாவட்ட செயலராக அர்ஜுன், ஜெ., பேரவை செயலராக நந்தகுமார், இணைச் செயலராக சுரேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புத்திசந்திரன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின், மாவட்ட செயலர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • கிலானியிடம் திடீர் மாற்றம்
    இஸ்லாமாபாத்: மெமோகேட் விவகாரத்தில், பாக்., ராணுவத் தலைவர் கயானி மற்றும் ஐ.எஸ்.ஐ., தலைவர் பாஷா இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் விளக்க அறிக்கைகள் அளித்த செயல், சட்ட விரோதமானது என கடந்த 10ம் தேதி பிரதமர் கிலானி விமர்சித்திருந்தார். இதையடுத்து, அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்நிலையில், ராணுவத்துடனான மோதலைத் தணிக்கும் வகையில், பிரதமர் கிலானி விடுத்த அறிக்கையில், "ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., தலைவர்கள் செய்தது சட்டவிரோதம் என்ற கருத்தை நான் வாபஸ் பெறுகிறேன். அக்கருத்து ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்னது. அப்போது, அரசு அமைப்புகளுக்குள் மோதல் இருந்தது; இப்போது இல்லை' என்றார்.


  • சிதம்பரம் அருகே கன்னித் திருவிழா
    கிள்ளை: சிதம்பரம் அருகே, சி.முட்லூரில் நடந்த பாரம்பரியமிக்க கன்னித் திருவிழாவில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தலையில், சப்த கன்னிகளை சுமந்து ஆடிப்பாடி சென்று உப்பனாற்றில் விட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூர், கீழ்அனுவம்பட்டு, அம்புபூட்டியபாளையம் சுற்றுப் பகுதியில், ஆண்டுதோறும் தை மாதத்தில் கன்னித் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. சி.முட்லூர் மற்றும் சுற்றுப் பகுதியில் திருமணமாகாத, 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்று தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பூப்போட்டனர். இன்று நடந்த உப்பனாற்றில் இறங்கும் நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட கிளை சப்த கன்னிகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், சப்த கன்னிகள் ஆற்றில் விட்டு வழிபட்டனர்.


  • அ.தி.மு.க., நிர்வாகி குண்டாசில் கைது
    ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி இணை செயலர் விஜய ராமகிருஷ்ணனை போலீசார் குண்டாசில் கைது செய்தனர். ராமநாதபுரம் வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் டிரைவர் சீனிவாசனை தாக்கியதாக பதிவான வழக்குகள் அடிப்படையில் பாரதிநகரை சேர்ந்த விஜய ராமகிருஷ்ணன் கைதாகி, ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ராமநாதபுரம் எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் பரிந்துரைப்படி, விஜய ராமகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்ராய் உத்தரவிட்டார். இதையடுத்து விஜய ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.


  • ஆஸி., ஓபன்: ஜோகோவிச் போராடி வெற்றி
    மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச். மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், "நடப்பு சாம்பியன்' ஜோகோவிச் (செர்பியா), இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே ஜோடியை எதிர்கொண்டது. இதில் 3-6, 6-7, முதல் இரண்டு செட்டை இழந்த ஜோகோவிச், பின் எழுச்சி பெற்றார். 4 மணி நேரம், 50 நிமிடங்கள் நீடித்த இப்போராட்டத்தில் ஜோகோவிச், 6-3, 3-6, 6-7, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில், இவர், ஸ்பெயினின் நடாலை எதிர்கொள்கிறார்.


  • ராஜிவ் கொலையாளிக்கு அனுமதி மறுப்பு
    வேலூர்: பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, ராஜிவ் கொலையாளி பேரறிவாளனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது பாட்டி கிருஷ்ணவேணி, 82, வேலூர் காட்பாடி காந்தி நகரில் வசித்து வந்தார். இவர், கடந்த 21ம் தேதி இறந்தார். பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பேரறிவாளன், சிறைத் துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார்; அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், பாட்டியின் காரியத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கும்படி பேரறிவாளன் மீண்டும் சிறைத் துறை அதிகாரிகளிடம் இன்று அனுமதி கேட்டபோது, அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து சிறைத் துறையினரிடம் கேட்டபோது, "பேரறிவாளனின் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள் இறந்தால் மட்டும் தான் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்படும். அவரது பாட்டி ரத்த உறவு சம்பந்தப்பட்டவர் அல்ல என்பதால் அனுமதி வழங்கப்படவில்லை' என்றனர்.


  • தங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.536 உயர்வு

    சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.536 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.2638க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விட இன்று சவரனுக்கு ரூ.536அதிகரித்து ரூ.21104க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளியின் ...

  • தனியாரிடம் 1,450 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்

    மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்க, மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. வரும் 2013 மே மாதம் வரை, 1,450 மெகாவாட்டும், பின், நான்காண்டுகளுக்கு, 450 மெகாவாட்டும், தனியாரிடம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், ...

  • நடப்பு நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் குறையும் - பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -

    நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நேரடி வரி வசூல் இலக்கில், 20 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது. அதே சமயம், மறைமுக வரி வசூல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் மூலம், 5 லட்சத்து 32 ...

  • உருக்கு உற்பத்தி 7 கோடி டன்னாக உயர்வு

    புதுடில்லி:சென்ற 2011ம் ஆண்டில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 5.7 சதவீதம் உயர்ந்து 7.22 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டு 6.83 கோடி டன்னாக இருந்தது. இதே ஆண்டுகளில், சர்வதேச உருக்கு உற்பத்தி, 6.8 சதவீதம் உயர்ந்து 152.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. உலகளவில் உருக்கு ...

  • ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 17 சதவீதம் சரிவு

    ஐதராபாத்:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலுமாக, முதல் ஆண்டு பிரிமிய வருவாயாக, 71 ஆயிரத்து 952 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்டதை விட, 17 சதவீதம் (86 ஆயிரத்து 697 கோடி ...

  • ஐடியா செல்லுலார் நிகர லாபம் சரிவு

    மும்பை: ஐடியா செல்லுலார் நிறுவனம், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 201 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின், இதே காலாண்டை விட 18 சதவீதம் (243 கோடி ரூபாய்) குறைவு.இதே காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 3,956 கோடியிலிருந்து, 5,031 ...

  • என்.எல்.சி., ரூ.2,314 கோடி வர்த்தகம்

    நெய்வேலி: என்.எல்.சி., நிறுவனம் கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 2,314.88 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் அன்சாரி தெரிவித்தார். என்.எல்.சி., நிறுவனத்தின் சார்பில் 63வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.


    இவ்விழாவில் அன்சாரி ...

  • வங்கி சேமிப்பிற்கு நாள்தோறும் வட்டி

    மும்பை:வங்கி சேமிப்பு கணக்கில், நாள்தோறும் இறுதியாக உள்ள இருப்புத் தொகையை கணக்கிட்டு, வட்டி வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.சென்ற ஆண்டு, அக்டோபர் மாதம் வங்கிகளின் சேமிப்பு கணக்கு வட்டி மீதான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியது. ...

  • கோல்கேட் - பாமாலிவ்விற்பனை ரூ.670 கோடி

    புதுடில்லி:கோல்கேட் - பாமாலிவ் நிறுவனம், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 116 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 74.48 சதவீதம் (66 கோடி ரூபாய்) அதிகம்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 19.95 சதவீதம் வளர்ச்சி கண்டு, 558 ...

  • பாக்தாத்தில் கார் வெடிகுண்டு வெடித்தது : நான்கு பெண்கள் உட்பட 28 பேர் பலி

    பாக்தாத் : ஈராக்கில், இறுதி ஊர்வலத்தின் போது, கார் வெடிகுண்டு வெடித்ததில், நான்கு பெண்கள் உட்பட 28 பேர் பலியாகினர்; 50 பேர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் கிழக்குப் பகுதியில், கடந்த 23ம் தேதி, ரியல் எஸ்டேட் அதிபர் முகமது அல் மாலிக் உட்பட, அவரது குடும்பத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. அப்போது, காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில், ஊர்வலத்தில் இருந்த நான்கு பெண்கள் உட்பட 28 பேர் பலியாகினர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இறுதி ஊர்வலத்தில், சவப் பெட்டிகளில் ...

  • பாக்., ராணுவ அகடமி மீது ராக்கெட் தாக்குதல்

    இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் உள்ள, ராணுவ அகடமி மீது நேற்று ஒன்பது ராக்கெட்டுகளை வீசி, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ளது அபோதாபாத். இங்கு தான் அல்- குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் வீடும் உள்ளது. இதன் பின்புறத்தில் சிறிது தொலைவில் பாக்., ராணுவ அகடமி இருக்கிறது. இந்த அகடமியைக் குறிவைத்து நேற்று அதிகாலையில், ஒன்பது ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இவற்றில் இரண்டு கையெறி ராக்கெட்டுகள். மூன்று ராக்கெட்டுகள், அகடமியின் சுற்றுச் சுவர் மீது மோதி ...

  • இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம் 3 ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்து

    லாகூர் : இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வர்த்தகத்தில் மூன்று முக்கிய ஒப்பந்தங்கள், அடுத்த மாதம் கையெழுத்தாக உள்ளன. உலக வர்த்தக கழகத்தின் சட்டப்படி, இந்தியா, பாகிஸ்தான் இடையே வர்த்தகம் நடந்து வருகிறது. இதில், 1996லேயே, மிக வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கிவிட்டது. ஆனால், பாக்., வர்த்தகத்தில் பஞ்சாப் வணிகர்களின் ஆதிக்கம் இருப்பதால், அத்தகைய அந்தஸ்தை அவர்கள், இந்தியாவுக்கு வழங்க தடை செய்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து பொருட்கள் மலிவு விலையில் பாகிஸ்தானுக்குச் சென்றால், தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பதால் தான், ...

  • கிலானியிடம் திடீர் மாற்றம்

    இஸ்லாமாபாத் : மெமோகேட் விவகாரத்தில், பாக்., ராணுவத் தலைவர் கயானி மற்றும் ஐ.எஸ்.ஐ., தலைவர் பாஷா இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் விளக்க அறிக்கைகள் அளித்த செயல், சட்ட விரோதமானது என கடந்த 10ம் தேதி பிரதமர் கிலானி விமர்சித்திருந்தார். இதையடுத்து, அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்நிலையில், ராணுவத்துடனான மோதலைத் தணிக்கும் வகையில், பிரதமர் கிலானி விடுத்த அறிக்கையில், "ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., தலைவர்கள் செய்தது சட்டவிரோதம் என்ற கருத்தை நான் வாபஸ் பெறுகிறேன். அக்கருத்து ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்னது. அப்போது, அரசு ...

  • ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்திற்கு பெருகும் ஆதரவு

    நியூயார்க் : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்க வேண்டும் என்ற, ஜி 4 நாடுகளின் பரிந்துரைக்கு, பல நாடுகள் ஆதரவளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் குறித்த விவாதக் கூட்டம் நேற்று துவங்கியது. இதில், இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய ஜி 4 நாடுகள் சார்பில், பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் பற்றிய தீர்மானத்தின் முன்வரைவு, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்து 85 நாடுகள் ...

  • பைனலில் ஜோகோவிச்: முர்ரே போராட்டம் வீண்

    மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச். மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், "நடப்பு சாம்பியன்' ஜோகோவிச் , இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை எதிர்கொண்டார். இதில் 3-6, 6-7, முதல் இரண்டு செட்டை இழந்த ஜோகோவிச், பின் எழுச்சி பெற்றார். 4 மணி நேரம், 50 நிமிடங்கள் நீடித்த இப்போராட்டத்தில் ஜோகோவிச், 6-3, 3-6, 6-7, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடக்கும் பைனலில் ஜோகோவிச், நடால்(ஸ்பெயின்) ...

  • கால்பந்து: கோவா அணி வெற்றி
    மார்கோ: ஐ-லீக் கால்பந்து தொடரின் 16வது சுற்றில் கோவா அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐந்தாவது ஐ- லீக் கால்பந்து போட்டி நடக்கிறது. இதன் 16வது சுற்றில் கோவா அணி, மும்பை எப்.சி., அணியை எதிர்கொண்டது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 16 சுற்றுகளின் முடிவில், கோவா (23) ஏழாம் இடத்திலும், மும்பை அணி (14) 11வது இடத்திலும் ...
  • கால்பந்து மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
    லண்டன்: பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்சனல் அணியை வீழ்த்தியது.இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், அர்சனல் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணி சார்பில் ஆன்டனியோ வாலன்சியா, டேனி வெல்பக் தலா ஒரு கோல் அடித்தனர். அர்சனல் அணிக்கு ராபின் வான் பெர்சி ஆறுதல் அளித்தார்.மற்றொரு போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் டாட்டன்ஹாம் ...
  • கால்பந்து: டெம்போ அணி வெற்றி
    ஷில்லாங்: ஐ-லீக் கால்பந்து தொடரின் 16வது சுற்றில் டெம்போ அணி வெற்றி பெற்றது. 
    இந்தியாவில் ஐந்தாவது ஐ- லீக் கால்பந்து போட்டி நடக்கிறது. இதன் 16வது சுற்றில் டெம்போ எஸ்.சி., அணி, ஷில்லாங் எப்.சி., அணியை எதிர்கொண்டது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெம்போ அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பிரயாக் யுனைடெட், மோகன் பகான் அணியை, 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 
    16 சுற்றுகளின் முடிவில், டெம்போ (36), ஈஸ்ட் பெங்கால் (33), சர்ச்சில் பிரதர்ஸ் (29) அணிகள் முதல் மூன்று இடங்களில் ...
  • கால்பந்து: புல்ஹாம் வெற்றி
    லண்டன்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில், புல்ஹாம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டில் அணியை வீழ்த்தியது.இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த போட்டியில் புல்ஹாம், நியூகாஸ்டில் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய புல்ஹாம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்ற போட்டிகளில் போல்டன் (3-1, எதிர்-லிவர்பூல்), குயீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் (3-1, எதிர்-விகான்), வெஸ்ட் புரோம் (2-1, எதிர்-ஸ்டோக்), சுந்தர்லாந்து (2-0, எதிர்-சுவான்சியா), அஸ்டான் வில்லா (3-2, எதிர்-வோல்வ்ஸ்) அணிகள் வெற்றி பெற்றது. எவர்டன்-பிளாக்பர்ன் ...
  • கால்பந்து: அமெரிக்க அணி வெற்றி
    அரிஜோனா: அரிஜோனாவில் நடந்த சர்வதேச "நட்பு' கால்பந்து போட்டியில், அமெரிக்க அணி வெற்றி பெற்றது.அமெரிக்கா, வெனிசுலா அணிகள் மோதிய இப்போட்டி, அமெரிக்காவில் நடந்தது. முதல் கோல் அடித்து முன்னிலை பெற இரு அணிகளும் போராடின. 15வது நிமிடத்தில் வெனிசுலாவின் போரஸ் அடித்த வாய்ப்பு வீணானது. 19, 20 வது நிமிடத்தில் அமெரிக்க வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது பாதியில் கடுமையான போராட்டத்தை, இரு அணியினரும் வெளிப்படுத்தினர். போட்டியின் கடைசி நிமிடத்தில் (90 வது) ஜோன்ஸ் அடித்த பந்தை, ...
  • கால்பந்து: பேயர்ன் முனிக் அணி தோல்வி
    மான்சென்கிளாடுபக்: ஜெர்மன் பண்டஸ்லிகா கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பேயர்ன் முனிக், போரசியா மான்சென்கிளாடுபக் அணிகள் மோதின. போட்டியின் துவக்கத்தில் இருந்தே போரசியா அணி ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு பலனாக 11வது நிமிடத்தில் இந்த அணியின் மார்கோ ஒரு கோல் அடித்தார். பின் 40, 70வது நிமிடங்களில் பாட்ரிக், இரு கோல்கள் அடித்தார். முனிக் அணி சார்பில் ஸ்கீவன்ஸ்டீகர் (75வது நிமிடம்) மட்டும் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் 1-3 என்ற கணக்கில் பேயர்ன் முனிக் அணி ...
  • கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் வெற்றி
    கோல்கட்டா: இந்தியாவில் ஐந்தாவது ஐ- லீக் கால்பந்து போட்டி நடக்கிறது. இதன் 16வது சுற்றில் ஈஸ்ட் பெங்கால், எச்.ஏ.எல்., எஸ்.சி., அணியை எதிர்கொண்டது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 16 சுற்றுகளின் முடிவில், டெம்போ (33), ஈஸ்ட் பெங்கால் (33), சர்ச்சில் பிரதர்ஸ் (29) அணிகள் முதல் மூன்று இடங்களில் ...
  • கால்பந்து: கோவா அணி வெற்றி
    மும்பை: ஐ- லீக் கால்பந்து தொடரின் 15வது சுற்றில் கோவா அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐந்தாவது ஐ- லீக் கால்பந்து போட்டி நடக்கிறது. இதன் 15வது சுற்றில் கோவா எஸ்.சி., அணி, மோகன் பகான் அணியை எதிர்கொண்டது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா எஸ்.சி., அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் பிரயாக் யுனைடெட், சிராக் யுனைடெட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 15 சுற்றுகளின் முடிவில், டெம்போ (33), ஈஸ்ட் பெங்கால் (30), சர்ச்சில் பிரதர்ஸ் (29) அணிகள் முதல் மூன்று இடங்களில் ...
  • இங்கிலீஷ் எப்.ஏ., கோப்பை கால்பந்து: பர்மிங்காம் வெற்றி
    வால்வர்ஹாம்டன்: இங்கிலீஷ் எப்.ஏ., கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பர்மிங்ஹாம் அணி வெற்றி பெற்றது.இங்கிலாந்தில் நடக்கும் இத்தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் பர்மிங்காம் அணி, வால்வர்ஹாம்டன் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 74வது நிமிடத்தில் வேடு எலியாட் அடித்த கோல் கைகொடுக்க, பர்மிங்காம் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.பிரைட்டன், ரெக்ஸ்ஹாம் அணிகள் மோதிய, "பெனால்டி' வரை சென்ற மற்றொரு போட்டியில் பிரைட்டன் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ...
Advertise Here
Other Link :  www.trichytoday.com